Home One Line P1 கொவிட்19: உள்நாட்டில் மூவருக்கு பாதிப்பு

கொவிட்19: உள்நாட்டில் மூவருக்கு பாதிப்பு

467
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,904-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 7 சம்பவங்களில் நால்வர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர்கள் ஆவர். உள்நாட்டில் மூன்று பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று ஒருவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,601 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 179 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இம்முறை எவரும் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை.