Home One Line P2 கொவிட்19: இந்தியாவில் தொற்று விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது

கொவிட்19: இந்தியாவில் தொற்று விகிதம் குறைய ஆரம்பித்துள்ளது

554
0
SHARE
Ad

புது டில்லி: இந்தியாவின் கொவிட் 19 எண்ணிக்கை புதன்கிழமை 1.5 மில்லியனைத் தாண்டி உள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் கொவிட்19-க்கு 48,513 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அது தெரிவித்துள்ளது. மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 34,193- ஆக பதிவாகி உள்ளன.

ஆயினும், அதிகம் பாதிக்கப்பட்டிருக்கும் 3 மாநிலங்களில், பாதிப்பு எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது. கடந்த ஒரு வார காலமாக இந்தியாவில் தினசரி பாதிப்பு எண்ணிக்கையானது, 50,000- க்கும் அதிகமாகவே இருந்தது.

#TamilSchoolmychoice

தொடர்ச்சியாக நடைமுறைப்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், மற்றும் எடுக்கப்பட்ட கொவிட்19 தடுப்பு நடவடிக்கைகள் மூலம் இந்தையாவில் இறப்பு விகிதமானது குறைவாக இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.