Home One Line P1 ‘எங்களை தனிமைப்படுத்த வேண்டுமென்றால், மகாதீரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

‘எங்களை தனிமைப்படுத்த வேண்டுமென்றால், மகாதீரும் தனிமைப்படுத்தப்பட வேண்டும்!

596
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மக்களவை அமர்வில் கலந்து கொண்ட தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொவிட்19 தொற்றிலிருந்து விடுபட்டுள்ளார்களா என்று ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்எஸ்என் ராயர் கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த பொந்தியான் நாடாளுமன்ற உறுப்பினர் அகமட் மஸ்லான், எதிர்க்கட்சியினர் பாரபட்சமாக நடந்து கொள்வதாகக் கூறினார்.

நேற்று, நஜிப் துன் ரசாக்கின் 7 ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் நீதிமன்ற வளாகத்தில் 1,000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதை ராயர் குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

அதில் கலந்து கொண்ட அகமட் மஸ்லான், பாலிங் நாடாளுமன்ற உறுப்பினர் அசிஸ் அப்துல் ரகிம் மற்றும் தஞ்சோங் காராங் நாடாளுமன்ற உறுப்பினர் நோ ஒமாரை அவர் குறிப்பிட்டார்.

“அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டார்களா என்று கேட்க விரும்புகிறேன். காரணம் நாம் இப்போது கொவிட்19 தொற்றினை எதிர்த்து போராடி வருகிறோம்.

“வெளியில் உள்ளவர்களுக்கு இது தெரிய வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா?” என்று அவர் வினவினார்.

நாடாளுமன்ற உறுப்பினர்கள் எந்தவொரு அறிகுறிகளையும் காண்பிக்காத வரையில் மக்களைவில் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்று அசார் அசிசான் தெரிவித்தார்.

ஆயினும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளை கடைப்பிடிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதனிடையே, தாங்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டுமென்றால், அண்மையில், அலோர் ஸ்டாரில் கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட துன் மகதீர் உட்பட பல தலைவர்களும் அவ்வாறு செய்யப்பட வேண்டுமென்று அகமட் மஸ்லான் கூறினார்.