Home One Line P1 தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

தேவைப்படுவோருக்கு வங்கிக் கடன் தள்ளுபடி 3 மாதங்களுக்கு நீட்டிப்பு

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுநோயால் 2020-இல் வேலை இழந்தவர்களுக்கு வங்கிக் கடன் தள்ளுபடியை  மூன்று மாதங்களுக்கு நீட்டிப்பதாக பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் இன்று அறிவித்துள்ளார்.

இந்த ஆண்டு வேலை இழந்தவர்கள் மற்றும் இன்னும் புதிய வேலைவாய்ப்பைப் பெறாதவர்கள் மூன்று மாதங்களுக்கு கடன் தள்ளுபடி கால அவகாசத்தை அனுபவிப்பார்கள் என்று அவர் கூறினார்.

மூன்று மாதங்களுக்குப் பிறகு, ஒவ்வொரு நபரின் நிலைமைக்கும் ஏற்ப அந்தந்த வங்கிகளால் தள்ளுபடிக் காலத்தை நீட்டிக்க முடியும் என்று மொகிதின் கூறினார்.

#TamilSchoolmychoice

” பணிபுரியும் நபர்களுக்கு, ஆனால் கொவிட் 19 காரணமாக அவர்களின் சம்பளம் பாதிக்கப்பட்டுள்ளது அல்லது குறைக்கப்பட்டுள்ளது என்றால், கடனின் வகையைப் பொறுத்து சம்பளக் குறைப்பு விகிதத்திற்கு ஏற்ப தவணைகள் குறைக்கப்படும்,” என்று அவர் கூறினார்.

புத்ராஜெயாவில் இன்று வங்கிக் கடன் தள்ளுபடி நீட்டிப்பு மற்றும் தேவைப்படுவோருக்கான வங்கி உதவியை அறிவிக்கும் போது அவர் இதனைக் கூறினார்.

“நிதி அமைச்சகம் மற்றும் தேசிய வங்கி ஆளுநருடன் கலந்துரையாடிய பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்று அவர் இன்று அறிவித்தார்.