Home One Line P1 பள்ளிகள் கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளன!

பள்ளிகள் கொவிட்19 தொற்றிலிருந்து பாதுகாப்பாக உள்ளன!

432
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சுகாதார அமைச்சகம் பள்ளிகளை பாதுகாப்பான, கொவிட்19 தொற்றிலிருந்து விடுப்பட்டப் பகுதிகளாக அறிவித்துள்ளது.

பள்ளி அமர்வு மீண்டும் தொடங்கியதிலிருந்து பள்ளி பகுதியில் கொவிட்19 தொடர்பான நேர்மறையான சம்பவங்களை சுகாதார அமைச்சு கண்டறியவில்லை என்று சுகாதார அமைச்சு இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

“பிரச்சனை இப்போது பள்ளிக்கு வெளியே உள்ளது. பள்ளிகளில் இருந்தால், அந்த அபாயங்களை நாங்கள் நிர்வகிக்க முடியும்.

#TamilSchoolmychoice

“ஒரு நேர்மறை சம்பவம் கண்டறியப்பட்டால், பள்ளியை மூடுவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுப்போம்,” என்று அவர் இன்று கூறினார்.

பள்ளிக்கு வெளியே நெரிசலைத் தவிர்ப்பதற்காக, குறிப்பாக கற்றல் அமர்வு முடிந்தபின், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைகளுக்கான வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு சுகாதார அமைச்சு, கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறினார்.