வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கொவிட்19 தொற்றைத் தடுக்க ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்படுத்துவதை மீண்டும் தற்காத்துள்ளார்.
தாம் அதனை பரிந்துரைத்ததால்தான் மலேரியா மருந்து கொவிட்19 சிகிச்சையாக நிராகரிக்கப்பட்டது என்று அவர் கூறினார்.
ஹைட்ராக்ஸி குளோரோகுயினை ஊக்குவிக்கும் காணொளியை டிரம்பின் மூத்த மகன் பதிவிட்டதை, டுவிட்டர் அகற்றியது. அதனை அடுத்து அவரது இக்கருத்து பதிவாகி உள்ளது.
இந்த மருந்து கொவிட்19 தொற்றை எதிர்த்துப் போராட எந்த ஆதாரமும் இல்லை. மேலும், இது இருதய பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும் என்று கட்டுப்பாட்டாளர்கள் எச்சரிக்கின்றனர்.
கடந்த மாதம், அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (எப்.டி.ஏ) கொவிட்19 நச்சுயிர் நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க மலேரியா மருந்தைப் பயன்படுத்துவதை எச்சரித்திருந்தது.