கோத்தா கினபாலு: மாநிலத்தின் சமீபத்திய அரசியல் சூழ்நிலையைத் தொடர்ந்து சபா ஆளுநர் துன் ஜூஹார் மஹிருதீடினை சபா முதலமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் சந்தித்தார்.
காலை 8.20 மணியளவில், அவர் இஸ்தானா நெகிரிக்குள் நுழைவதைக் காண முடிந்தததாக பெர்னாமா தெரிவித்தது.
பின்னர் காலை 9 மணியளவில் இஸ்தானா நெகிரியிலிருந்து அவர் வெளியேறியதாகக் கூறப்பட்டது.
முன்னாள் சபா முதலமைச்சர் முதலமைச்சர் டான்ஸ்ரீ மூசா அமான் நேற்று இங்கு செய்தியாளர் சந்திப்பில் பல கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியில் புதிய மாநில அரசாங்கத்தை அமைப்பதற்கு எளிய பெரும்பான்மையைப் பெற்றதாகக் கூறினார்.
இஸ்தானா நெகிரியின் நுழைவாயில்களில் பாதுகாப்பு மிகவும் கடுமையாக உள்ள நிலையில், நிருபர்கள் அருகில் செல்ல அனுமதிக்கப்படவில்லை.
முகமட் ஷாபி காலை 10 மணிக்கு இங்குள்ள மாநில அரசு நிர்வாக மையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்த உள்ளார்.
மூசா தனது பத்திரிகையாளர் சந்திப்பில், தனக்கு ஆதரவளிக்கும் சட்டமன்ற உறுப்பினர்களிடமிருந்து சத்தியப்பிரமாணங்களை ஒப்படைக்க உள்ளார்.