Home One Line P2 கர்ணன்: ஒரு கிராமத்தையே உருவாக்கிய இயக்குனர்!

கர்ணன்: ஒரு கிராமத்தையே உருவாக்கிய இயக்குனர்!

658
0
SHARE
Ad

சென்னை: ‘பரியேறும் பெருமாள்’ திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கர்ணன்’ படத்தின் தலைப்பு காணொளி வெளியாகி பிரபலமாகி வருகிறது.

தனுஷின் பிறந்தநாளன்று ‘கர்ணன்’ திரைப்படத்தின் தலைப்பு காணொளி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, ஒரு கிராமத்தையே உருவாக்கிய காணொளியும் வெளியிடப்பட்டு பார்வையாளர்களை பிரமிக்கச் செய்துள்ளது.

இவ்வளவு மெனக்கெட்டு ஒரு கிராமமே அமைக்கப்பட்டுள்ளதற்கு இயக்குநர் மாரி செல்வராஜுக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

#TamilSchoolmychoice

தனுஷின் 41-வது படமான இதில் அவருக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார். யோகிபாபு, லால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

கீழே காணொளி இணைக்கப்பட்டுள்ளது: