Home One Line P2 இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்

இலண்டன் பல்கலைக்கழகத்தின் தமிழ்த்துறையை நிறுவும் பன்னாட்டுக் கருத்தாடல்

1054
0
SHARE
Ad
ப.கமலநாதன் – முத்து நெடுமாறன் – இரா.திருமாவளவன்

இலண்டன் : நமது தாய்மொழியாம் தமிழ் மொழியை, இலண்டன் பல்கலைக்கழகம் (SOAS – School of Oriental & African Studies) தனது பாட மொழியாக அமைத்து, தமிழில் இளங்கலை, முதுகலை, மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை நடத்தவிருக்கிறது. கல்வித் துறை என்று வரும்போது உலகின் முதன்மை நகர்களில் ஒன்றான புகழ்பெற்ற இலண்டன் மாநகரில் தமிழுக்கு இத்தகைய பெருமை கிடைக்கவிருக்கிறது என்பது நமக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் நற்செய்தியாகும்.

இதனால், தமிழர் பண்பாடு, வரலாறு, மருத்துவம், அறிவியல், மெய்யியல், கட்டடக்கலை, நாகரீகம் என அனைத்தையும் உலக அரங்கில் பேசுபொருளாக மாறும் காலம் நம் கண்முன்னே உருவாகிக் கொண்டிருக்கிறது எனலாம்.

இந்த இலண்டன் பல்கலைக்கழக தமிழ்த்துறை பற்றிய தகவல்களைப் பெற, வரும் ஆடி 18 அன்று (ஞாயிறு ஆகஸ்ட் 2 – Sunday, 02 August 2020) இலண்டன் நேரம் 2.00 PM-4.00 PM [2.00 pm (London), 6:30pm(Chennai/Jaffna), 6.00 am (NY), 6.00 am (LA), 9.00 pm (Kuala Lumpur/Singapore), 10.00 pm (Tokyo), 11.00 pm (Sydney)], அன்று நடைபெறும் பன்னாட்டுக் கருத்தாடல் வலையரங்கத்தில் கலந்துகொள்ளுங்கள்.

#TamilSchoolmychoice

இதில் முன்பதிவு செய்ய, கீழ்க்கண்ட இணைப்பைப் பயன்படுத்துங்கள் : https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfKRQVg7pusDECp22H3yOglc7Uv4t_sX1m2tShjbUfQww9BYA/viewform?vc=0&c=0&w=1

தொடர்புக்கு :

ஐக்கிய இராச்சியத் தமிழ்த்துறை

www.tamilstudiesuk.org

 

சுப.நற்குணன் – பழனி சுப்பையா

இந்த நிகழ்ச்சியில் மலேசியாவின் சார்பில் முன்னாள் கல்வித் துணையமைச்சரும் ம.இ.கா கல்விக் குழுத் தலைவருமாகிய டத்தோ ப.கமலநாதன், முரசு அஞ்சல் நிறுவனர் முத்து நெடுமாறன், தமிழறிஞர் இரா.திருமாவளவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்குவார்கள்.

கல்வியாளர்கள் சுப.நற்குணன் மற்றும் பழனி சுப்பையா ஆகிய இருவரும் மலேசியாவுக்கான தொடர்பாளர்களாக இருந்து இந்த ஏற்பாட்டினைச் செய்துள்ளார்கள். மலேசியாவின் சார்பில் 60 பேராளர்கள் இந்தப் பன்னாட்டு கருத்தாடல் வலையரங்கத்தில் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.