அவருக்கு வயது 80.
1940ஆம் ஆண்டு நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறையில் பிறந்தவர் கந்தசாமி. 1968ல் வெளியான “சாயாவனம்” நாவல் இவரது படைப்புகளில் சிறந்ததாகக் கருதப்படுகிறது.
இந்த நாவலை தேசிய புத்தக அறக்கட்டளை, நவீன இந்திய இலக்கியங்களில் சிறந்த ஒன்றாக அறிவித்தது.
இவரது “தென்னிந்திய சுட்ட மண் சிலைகள்” பற்றிய ஆய்வினை அடிப்படையாகக் கொண்டு சென்னை தூர்தர்ஷன், ‘காவல் தெய்வங்கள்’ என்னும் 20 நிமிட ஆவணப்படத்தைத் தயாரித்து வெளியிட்டது.
1998ல் “விசாரணைக் கமிஷன்” என்ற நாவலுக்காக, தமிழுக்கான சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.
இவர் எழுதிய “நிகழ் காலத்திற்கு முன்பு” எனும் நூல் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் 2006 ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சுற்றுப்புறவியல் எனும் பிரிவில் பரிசு பெற்றிருக்கிறது.
கவிப்பேரரசு வைரமுத்து இரங்கல்
தனது டுவிட்டர் பக்கத்தில் வைரமுத்து தனது இரங்கலை பின்வருமாறு பதிவிட்டார்:
மறைந்தாரே சா.கந்தசாமி!
‘சாயாவனம்’ சாய்ந்துவிட்டதே!
தன்மானம் – தன்முனைப்பு
தனி அடையாளமென்று மெய்வெளியில் இயங்கிய கலைஞன் அல்லனோ!
சதை அழிவுறும்; அவர் கதை அழிவுறாது.
மு.க.ஸ்டாலின் இரங்கல்
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும், சா. கந்தசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.