Home One Line P2 டிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும்

டிக் டாக் குறுஞ்செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும்

634
0
SHARE
Ad

வாஷிங்டன் :  சீனாவின் டிக் டாக் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்திருக்கின்றார்.

இதுதொடர்பான உத்தரவு ஒன்றில் தான் விரைவில் கையெழுத்திட இருப்பதாக அவர் தெரிவித்தார்.

டிக் டாக் குறுஞ்செயலியின் பயனர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாப்பாக இல்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன. தொடர்ந்து அமெரிக்கா இதுகுறித்து ஆழ்ந்த கவலையைத் தெரிவித்து வந்தது.

#TamilSchoolmychoice

இதன் பிரதிபலனாகவே அந்த குறுஞ்செயலி தடை செய்யப்படும் எனத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவின் தலைநகர் பெய்ஜிங்கைத் தலைமையகமாகக் கொண்ட சீன நிறுவனமான பைட் டான்ஸ் (ByteDance), டிக் டாக் குறுஞ்செயலியின் உரிமையை கொண்டுள்ளது.

டிக்டாக் குறுஞ்செயலியின் பயனர்களின் தரவுகள் சீன அரசாங்கத்திற்கு பரிமாற்றம் செய்யப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன.

ஒரு குறுஞ்செய்தியை வணிகரீதியாக வெற்றிகரமாக உருவாக்கியதில் டிக் டாக் முதலிடம் வகிக்கிறது.

டிக் டாக் செயலியை தடை செய்யும் அமெரிக்க அரசாங்கத்தின் உத்தரவில் இன்று சனிக்கிழமை டிரம்ப் கையெழுத்திடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதே செயலியை இந்தியாவும் ஏற்கனவே தடை செய்திருக்கிறது. டிக் டாக் குறுஞ்செயலியோடு சேர்த்து மேலும் 59 குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்தது.

அதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கையாக மேலும் 47 குறுஞ்செயலிகளை இந்தியா தடை செய்திருக்கிறது.

சுமார் 250 சீனக் குறுஞ்செயலிகளைத் தடைசெய்யும் பரிசீலனையில் இந்தியா தற்போது ஈடுபட்டிருக்கிறது.