Home One Line P1 கொவிட்19: சிவகங்கா தொற்றுக் குழு எண்ணிக்கை அதிகரிப்பு

கொவிட்19: சிவகங்கா தொற்றுக் குழு எண்ணிக்கை அதிகரிப்பு

484
0
SHARE
Ad

கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 14 புதிய கொவிட்19 பாதிப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 8,999-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 14 சம்பவங்களில் ஒருவர் வெளிநாட்டிலிருந்து நாட்டிற்கு திரும்பியவர் ஆவார். உள்நாட்டில் 13 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்களில் 11 பேர் சிவகங்கா தொற்றுக் குழுவில் சம்பந்தப்பட்டவர்கள்.

#TamilSchoolmychoice

இன்று எழுவர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,664 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 210 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், ஒருவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.