மீட்சிக்கான நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையை மீறிய பல்வேறு குற்றங்களுக்காக 315 நபர்களை காவல் துறை நேற்று கைது செய்ததாக தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
அந்த எண்ணிக்கையில், மூன்று நபர்கள் தடுத்து வைக்கப்பட்ட நிலையில், 312 நபர்களுக்கு அபதாரம் விதிக்கப்பட்டது.
“நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவுக்கு கீழ்ப்படியாத குற்றங்களில், நிர்ணயிக்கப்பட்ட கட்டுப்பாட்டு ஆணைகளை பின்பற்றாத நடவடிக்கைகள் (38), கூடல் இடைவெளி (150) மற்றும் முகக்கவசம் அணியாதது (127) நடவடிக்கைகள் ஆகியவை அடங்கும்” என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
கொவிட்19 தொற்றுநோய் பரவுவதைத் தடுக்கும் முயற்சியாக, நேற்று முதல், மக்கள் நெரிசலான பகுதிகளில் முகக்கவசம் அணிய வேண்டும் என்று அரசாங்கம் கோரியது.
சமீபத்திய விதிகளை பின்பற்றத் தவறினால், பொதுமக்கள் சட்டம் 342 (தொற்று நோய்களைத் தடுக்கும் மற்றும் கட்டுப்படுத்தும் சட்டம் 1988)- இன் கீழ் 1,000 ரிங்கிட் அபராதம் விதிக்கப்படும்.