Home One Line P1 பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால், தொகுதிப் பங்கீடு பிரச்சனை தீர்க்கப்படும்

பெர்சாத்து, முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால், தொகுதிப் பங்கீடு பிரச்சனை தீர்க்கப்படும்

566
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முவாபாக்காட் நேஷனலில் பெர்சாத்து கட்சி இணைந்தால், அம்னோவிற்கும் அக்கட்சிக்கும் இடையில் தொகுதிகள் விநியோகம் தொடர்பான பிரச்சனை தீர்க்கப்படலாம்.

இதன் மூலமாக அம்னோ மற்றும் பெர்சாத்து அவர்களின் உண்மையான எதிரிகள் மீது கவனம் செலுத்த முடியும் என்று அம்னோ உச்சமன்றக் குழு உறுப்பினர் தாஜுடின் அப்துல் ரஹ்மான் கூறினார்.

“பெர்சாத்து ஒப்புக் கொண்டு முவாபாக்காட் நேஷனலில் இணைந்தால் மட்டுமே, மூன்று முனை போட்டிகள் இருக்காது. அது ஒரு நல்ல யோசனையாகும்.

#TamilSchoolmychoice

“தொகுதிகளின் விநியோகம், கொள்கையின் அடிப்படையில் முதலில் தீர்க்கப்பட வேண்டும். அடிப்படையில் தேசிய கூட்டணியில், நம்மிடையே எந்தப் போட்டியையும் நாம் விரும்பவில்லை.

“நியாயமான தொகுதி விநியோகத்தில் எந்த பிரச்சனையும் இல்லை என்றால் விவாதிக்க முடியும் என்று நான் நினைக்கிறேன். அம்னோ பெரிய கட்சி, 20 தொகுதிகளில் போட்டியிட விரும்பாது” என்று அவர் கூறினார்.

ஜூலை 30-ஆம் தேதி, அம்னோ தலைவர் அகமட் சாஹிட் ஹமிடி, பெர்சாத்து முவாபாக்காட் நேஷனலில் சேர விரும்புவதாகத் தெரிவித்திருந்தார்.

அவரைப் பொறுத்தவரை, தேசிய கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவு என்பது மக்களவையில் அம்னோ மற்றும் தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாநில அளவில் சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்த ஆதரவின் அடிப்படையில் மட்டுமே உள்ளதாகக் கூறியிருந்தார்.

“ஜூலை 24 அன்று நடந்த கூட்டத்தில் உச்சமன்றம் தேசிய கூட்டணியில் சேர வேண்டாம் என்ற முடிவு செய்திருந்தது. இந்த முடிவில், அம்னோ, பாஸ் மற்றும் தேசிய முன்னணி கட்சிகளின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருப்பது போல, முவாபாக்காட் நேஷனலில் இருப்பதே சிறந்த தளமாகும்” என்று அவர் செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.