Home இந்தியா கனடா, அமெரிக்காவுக்கு சிதம்பரம் சுற்றுப்பயணம்

கனடா, அமெரிக்காவுக்கு சிதம்பரம் சுற்றுப்பயணம்

618
0
SHARE
Ad

sithambaramசென்னை, ஏப்ரல் 14- இந்தியாவின் பண வீக்கம் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில்  அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக, பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு  மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், ஒரு வாரம் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக் கூறி அன்னிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக  சிதம்பரம்  அமெரிக்கா, கனடாவுக்கு சுற்றுப்பயணம் செய்கிறார்.

வரும்  15ம் தேதி முதல்  டொரண்டோ, ஒட்டவா, பாஸ்டன், நியூயார்க் நகரங்களில் நடைபெறும் கூட்டங்களில்  அவர் பங்கேற்கிறார்.

#TamilSchoolmychoice

19ம் தேதி, வாஷிங்டனில் உள்ள சர்வதேச செலாவணி நிதியம் மற்றும் உலக வங்கி அதிகாரிகளுடனும் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.