Home One Line P2 கூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது

கூகுள் தாய் நிறுவனம் ஆல்பாபெட் வருமானம் குறைந்தது

792
0
SHARE
Ad

நியூயார்க்  : அமெரிக்காவின் கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனம் ஆல்பாபெட் (Alphabet). கடந்த பல ஆண்டுகளாக தொடர்ந்து வருமான அதிகரிப்பு கண்டு வந்த இந்த நிறுவனம் தற்போது முதன் முறையாக வருமானக் குறைவை அறிவித்திருக்கிறது.

ஜூன் மாதத்துடன் முடிவடைந்த நிதி ஆண்டில் முதல் தடவையாக தனது வருமானத்தில் குறைவு ஏற்பட்டிருப்பதாக அது அறிவித்திருக்கிறது.

உலகம் முழுவதும் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கும் கொவிட்-19 கூகுளின் வருமான குறைவுக்கான காரணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

கடந்த வியாழக்கிழமை  ஜூலை 30-ஆம் தேதி வெளியிடப்பட்ட ஆல்பாபெட் நிதி அறிக்கையின் படி  38.3 பில்லியன் டாலர் வருமானத்தை இரண்டாம் காலாண்டில் பெற்றதாக ஆல்பாபெட் அறிவித்தது. எனினும் இது கடந்த ஆண்டை விட 2 விழுக்காடு குறைவாகும்.

வால் ஸ்ட்ரீட் மதிப்பீட்டாளர்கள் 37.4 பில்லியன் டாலர் வருமானத்தை ஆல்பாபெட் பெறும் என மதிப்பிட்டனர். அந்த மதிப்பீட்டை விட கூடுதலான வருமானத்தையே ஆல்பாபெட் பதிவு செய்திருக்கிறது.

நெருக்கடியான பொருளாதார சூழ்நிலையில்  ஆல்பாபெட் தொடர்ந்து தனது வருமானத்தை நிலைநிறுத்திக்கொள்ள பாடுபட்டு வரும் என அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவித்தது

விளம்பர வருமானத்தைப் பொறுத்தவரை  கூகுள் தளங்களில் 10  விழுக்காடு சரிவு ஏற்பட்டது. ஆய்வுக்குரிய காலத்தில் விளம்பர வருமானம் 29.9  பில்லியன் டாலராக இருந்தது.

எனினும் கூகுளின் யூடியூப் தளத்தின் மூலம் கிடைத்த விளம்பர வருமானம் 6 விழுக்காடு உயர்வு கண்டது.

கூகுள் கிளவுட் என்பது ஆல்பாபெட் நிறுவனத்திற்கு வளர்ச்சியைத் தந்து கொண்டிருக்கும் மற்றொரு வருமானத் தளமாகும். அமேசோன் வெப் செர்விசஸ், மைக்ரோசாப்ட் போன்ற நிறுவனங்களோடு போட்டியிடுகிறது கூகுள் கிளவுட்.

கடந்த ஆண்டை விட 43 விழுக்காடு கூடுதல் வருமானத்தை – அதாவது 3 பில்லியன் டாலருக்கும் மேற்பட்ட வருமானத்தை – கூகுள் கிளவுட் பெற்றது.

ஆல்பாபெட், கூகுள் நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரியாக சுந்தர் பிச்சை செயல்பட்டு வருகிறார்.