Home One Line P1 “42 மில்லியனை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை!” – நஜிப்

“42 மில்லியனை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை!” – நஜிப்

602
0
SHARE
Ad

கோலாலம்பூர்: எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் நிறுவனம் விசாரணையில் பணமோசடி, நம்பிக்கை மோசடி மற்றும் அதிகார அத்துமீறல் ஆகியவற்றில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட சுமார் ஒரு வாரத்திற்குப் பிறகு, நஜிப் ரசாக் 42 மில்லியன் ரிங்கிட்டை தனிப்பட்ட நோக்கங்களுக்காக பயன்படுத்தவில்லை என்று வலியுறுத்தியுள்ளார்.

கோலாலம்பூர் உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, மேல்முறையீடு செய்வதாக சபதம் செய்த முன்னாள் பிரதமர் – இது “மிகவும் நியாயமற்றது” என்று விவரித்தார்.

நேற்றிரவு பதிவேற்றிய ஏழு நிமிட காணொளியில், எஸ்ஆர்சி பணம் அம்னோ நலத்திட்டங்களுக்காகவும், பெருநிறுவன சமூக பொறுப்புணர்வு திட்டங்களுக்காகவும், கைவிடப்பட்டவர்களுக்கும் பயன்படுத்தப்பட்டது என்று கூறினார். தமக்காக அல்ல என்றும் நஜிப் கூறினார்.

#TamilSchoolmychoice

“பெறப்பட்ட 42 மில்லியன் ரிங்கிட்டுக்கு, 210 மில்லியன் ரிங்கிட் அபராதம் செலுத்த எனக்கு தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தப் பணம் 99 விழுக்காடு நல்ல நோக்கங்களுக்காக செலவிடப்பட்டது. ஒவ்வொரு 1 ரிங்கிட்டுக்கும் 5 ரிங்கிட் அபராதம் ஆகும். உண்மை என்னவென்றால், அது தனிப்பட்ட நலனுக்கான செலவு அல்ல.

“99 விழுக்காடும் தனிப்பட்ட செலவினங்களுக்காக அல்ல என்பதை நீதிமன்றமே உறுதிப்படுத்தியுள்ளது.

“எடுத்துக்காட்டாக, எஸ்ஆர்சி வழக்கில் சம்பந்தப்பட்ட சாட்சி, கைவிடப்படோர் மற்றும் அவர்களின் பள்ளி செலவுகளை கவனித்துக்கொள்வதற்காக தினசரி பயன்பாட்டிற்காக பெக்கானில் உள்ள ரூமா பென்யயாங் துன் அப்துல் ரசாக்கிற்கு 400,000 ரிங்கிட் பங்களிப்பை நான் அளித்ததைக் கூறினார். அந்த நன்கொடை காரணமாக, எனக்கு 2 மில்லியன் ரிங்கிட் அபராதம் விதிக்கப்பட்டது

“தொண்டு செய்ததற்காகவும், கைவிடப்பட்டவர்களை பராமரிப்பதற்காகவும், அவர்களின் பள்ளிப்படிப்பிற்காகவும் நான் தண்டிக்கப்பட்டேன்” என்று நஜிப் கூறினார்.

இதனிடையே, ஜூலை 28 அன்று, நஜிப் ரசாக்கிற்கு அதிகார அத்துமீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், 210 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

நம்பிக்கை மீறல் குற்றச்சாட்டுக்கு,  நீதிபதி முகமட் நஸ்லான் முகமட் கசாலி ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு  10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார்.

பணமோசடி குற்றங்களுக்காக, ஒவ்வொரு குற்றத்திற்கும் நஜிப்புக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அனைத்து சிறைத் தண்டனைகளையும் நஜிப் ஒரே காலகட்டத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தீர்ப்பளித்தார்.

நஜிப் ரசாக், நம்பிக்கை மோசடி, பணமோசடி மற்றும் அதிகார அத்துமீறல் தொடர்பான ஏழு குற்றச்சாட்டுகளிலும் குற்றவாளி என நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.