புத்ராஜெயா: வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்களில், நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்கத் தவறியதற்காக 80 நபர்கள் மீது காவல் துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்ட இந்நபர்களை காவல் துறை மற்றும் சுகாதார அமைச்சகம் எப்போதும் சரிபார்த்து கண்காணிக்கும் என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
“நேற்று, அந்தந்த வீடுகளில் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலை மேற்கொண்ட நபர்கள் மீது காவல் துறை 2,078 பரிசோதனைகளை நடத்தியது” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
சமீபக் காலத்தில், வீட்டில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த ஒரு சிலர் அதனை மீறி வெளியில் சென்றதை அடுத்து, நாட்டில் புதிய தொற்றுக் குழுக்கள் உருவாகின. இதனைத் தடுக்கும் முயற்சியில் அரசு, மீண்டும் தங்கும் விடுதி மற்றும் தனிமைப்படுத்தல் மையங்களில் வெளிநாடுகளிலிருந்து திரும்புவோரை தனிமைப்படுத்த முடிவு செய்தது.