வாஷிங்டன்: அமெரிக்காவில் கொவிட்-19 நோய்த்தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை தொடர்ந்து சரிவு கண்டுள்ளன.
அமெரிக்க குடிமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற முடிவு அறிவிக்கப்பட்டதை அடுத்து பாதிப்புகள் குறைய ஆரம்பித்துள்ளது.
முகக்கவசங்களைப் பயன்படுத்திய ஐந்து நாட்களுக்குப் பிறகு, தினசரி சம்பவ வளர்ச்சி விகிதம் ஒரு சதவீதத்திற்கும் குறைவாகவே காணப்படுகிறது. 21 நாட்களுக்குப் பிறகு வளர்ச்சி விகிதம் இரண்டு விழுக்காடு என்று அயோவா பல்கலைக்கழகத்தின் கொள்கை மற்றும் சுகாதார மேலாண்மைத் துறையின் ஆராய்ச்சி கூறி உள்ளது.
ஏப்ரல் 8 மற்றும் மே 15- க்கு இடையில், 15 அமெரிக்க மாநில ஆளுநர்களும், வாஷிங்டன் மாநகராட்சி மன்றத் தலைவரும் பொது இடங்களில் முகக்கவசங்களை பயன்படுத்த கட்டாயப்படுத்தும் உத்தரவில் கையெழுத்திட்டனர்.
அதன்படி, மார்ச் 31 முதல் மே 22 வரை மாவட்ட அளவில் கொவிட்19 சம்பவ விகிதத்தில் ஏற்படும் மாற்றங்களை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்தனர்.
மே 22- க்குள் 230,000- 450,000 சம்பவங்கள் தடுக்கப்பட்டிருக்கலாம் என்று ஆய்வு மதிப்பிட்டுள்ளது.