Home One Line P1 சபா: நீதிமன்ற முடிவுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது!

சபா: நீதிமன்ற முடிவுக்கு மத்தியில் தேர்தல் ஆணையம் தயார் நிலையில் உள்ளது!

549
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தேர்தலை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கை தொடர்பாக நீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்கும் அதே வேளையில், சபா மாநில தேர்தலுக்கு தேர்தல் ஆணையம் தொடர்ந்து தயாராகி வரும்.

தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் ஆணையத்தின் முடிவை நீதித்துறை மறுஆய்வு செய்வதற்கான விண்ணப்பம் கோத்தா கினபாலுவில் உள்ள உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

கொவிட் 19 தொற்றுநோயின் அச்சுறுத்தலை நாடு எதிர்கொள்ளும் போது, தேர்தல்களை நடத்த முடியாது என்று முன்னாள் முதல்வர் டான்ஸ்ரீ மூசா அமான் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

மூசா அமான் முறையான முதலமைச்சராக அறிவிக்கப்பட வேண்டும் என்ற விண்ணப்பம் கூட்டரசு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது என்று சபாவில் ஒரு வழக்கறிஞரும் 2 வணிகர்களும் தெரிவித்தனர்.

நீதிமன்றத்தின் தீர்ப்பு நிலுவையில் இருந்தாலும், ஆணையம் தயார் நிலையில் இருப்பது அவசியம். தேர்தல் தொடரும் என்று தேர்தல் ஆணையத்தின் செயல் தலைவர் அஸ்மி சரோம் தெரிவித்தார்.

“நாங்கள் தொடர வேண்டும், அது எங்கள் பொறுப்பு,” என்று அவர் கூறினார்.

தேர்தல் ஆணையம் சமீபத்தில் சினியில் இடைத்தேர்தலை நடத்தியது, இந்த மாத இறுதியில் பேராக்கில் இடைத்தேர்தலை நடத்தவுள்ளதால், மாநிலத் தேர்தலை தொற்றுநோய் சூழலில் நடத்துவது “ஒரு பிரச்சனை அல்ல” என்று அஸ்மி கூறினார்.

சபா மாநில சட்டமன்றத்தில் 73 தொகுதிகள் உள்ளன. மேலும், இது அதிக வளங்களையும் அதிக செலவுகளையும் உள்ளடக்கும். இருப்பினும், நடைமுறையில் உள்ள சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகள் முக்கியமானது என்று அஸ்மி கூறினார்.

மாநிலத்தில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து சட்டமன்றம் கலைக்கப்பட்டது.