Home One Line P2 நான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி!

நான்காவது முறையாக விஜய் உடன் இணையும் அட்லி!

731
0
SHARE
Ad

சென்னை: இயக்குனர் அட்லி தனது ‘ராஜா ராணி’ திரைப்படம் மூலம் அனைவரையும் கவர்ந்தார்.

அட்லி பின்னர் நடிகர் விஜய் உடன் ‘தெறி’ படத்திற்காகக் கைகோர்த்தார். அதனை அடுத்து விஜய் உடன் தொடர்ந்து ‘மெர்சல்’ மற்றும் ‘பிகில்’ போன்ற வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்தார்.

இப்போது, ​​சமீபத்திய தகவல்களின்படி, அட்லி விரைவில் விஜய் உடன் மீண்டும் இணைவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

‘பிகில்’ படத்திற்குப் பிறகு அட்லி பாலிவுட் நடிகர் ஷாருக் கானுடன் கைகோர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படம் நீண்ட காலமாக தாமதமாகி வருகிறது. மேலும் கொவிட்19 பாதிப்பால் மேலும் தாமதமாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கடைசியாக பெரிய திரையில் தோன்றிய ஷாருக் கான் இயக்குனர் ராஜ்குமார் ஹிரானி மற்றும் அட்லி உடன் ஒரே நேரத்தில் பணியாற்றுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு பட அறிவிப்புகளும் ஷாருக் கானின் பிறந்தநாளில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் தற்போது, அட்லி நான்காவது முறையாக விஜய் உடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.