Home One Line P1 ஊழல் குற்றச்சாட்டு: குவான் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

ஊழல் குற்றச்சாட்டு: குவான் எங் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்

628
0
SHARE
Ad

கோலாலம்பூர்: முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் வாகனம் இன்று காலை 8.30 மணியளவில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணைய (எம்ஏசிசி) தலைமையகத்திலிருந்து புறப்பட்டது.

6.3 ரிங்கிட் பில்லியன் மதிப்புள்ள பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்தில் ஊழல் வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகளை எதிர்கொள்ள அவர் நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

பினாங்கு முன்னாள் முதல்வரான லிம் வழக்கின் நிலைமையைக் கண்டறிய ஊடகவியலாளர்கள் காலை 7 மணியளவில் நீதிமன்ற வளாகத்தில் கூடியிருந்தனர்.

#TamilSchoolmychoice

புத்ராஜெயாவில் உள்ள எம்ஏசிசி தலைமையகத்திற்கு நேற்று இரவு 9.30 மணியளவில் அவர் அழைக்கப்பட்டார். அங்கு அவர் கைது செய்யப்பட்டார்.

எம்ஏசிசி சட்டம் 2009- இன் பிரிவு 16 (அ) (ஏ)- இன் படி இன்று காலை 9 மணிக்கு கோலாலம்பூரின் ஜாலான் டூத்தா சிறப்பு ஊழல் நீதிமன்றத்தில் லிம் மீது குற்றம் சாட்டப்படுகிறது.

எம்ஏசிசி சட்டம் 2009- இன் பிரிவு 23-இன் படி ஆகஸ்ட் 10- ஆம் தேதி பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் லிம் மீது குற்றம் சாட்டப்படும் என்று எம்ஏசிசி வெளியிட்ட ஓர் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கோலாலம்பூர் மற்றும் பினாங்கு நீதிமன்றங்களில் உள்ள இரண்டு குற்றச்சாட்டுகளும் பினாங்கு கடலடி சுரங்கப்பாதை திட்டத்துடன் தொடர்புடையவை என்று எம்ஏசிசி குறிப்பிட்டுள்ளது.

எம்ஏசிசி சட்டத்தின் பிரிவு 23-இன் படி பினாங்கு அமர்வு நீதிமன்றத்தில் வெவ்வேறு வழக்குளில் லிம் மீது வழக்குத் தொடர சட்டத்துறை தலைவரிடமிருந்து எம்ஏசிசி அனுமதி பெற்றது.