Home One Line P1 குவான் எங் குற்றச்சாட்டுகளை மறுத்தார்

குவான் எங் குற்றச்சாட்டுகளை மறுத்தார்

647
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பினாங்கில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை செயல்படுத்த, ஒரு நிறுவனத்தை நியமிக்க உதவியதற்காக இலஞ்சம் கோரிய குற்றச்சாட்டின் பேரில் முன்னாள் நிதியமைச்சர் லிம் குவான் எங் இன்று அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

60 வயதான லிம், தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் மறுத்தார்.

குற்றச்சாட்டின் படி, லிம், பினாங்கு முதல்வராக இருந்த காலத்தில், டத்தோ சாருல் அகமட் முகமட் சுல்கிப்லி பெற வேண்டிய இலாபத்தில் இருந்து, 10 விழுக்காடு மதிப்புள்ள வெகுமதியை இலஞ்சமாகக் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

பினாங்கு நகரில் பிரதான சாலை மற்றும் சுரங்கப்பாதை கட்டுமான திட்டத்தை மேற்கொள்ள சாருலுக்கு சொந்தமான நிறுவனங்களை நியமிக்க உதவிதற்கு ஒரு ஊதியமாக இந்த தொகைப் பெறப்பட்டதாகக் கூறப்படுகிறது.

2011 மார்ச் மாதம் மிட் வெலி சிட்டியின் சைட் புத்ரா வட்டம், தி கார்டன்ஸ் தங்கும் விடுதி அருகே பாகான் நாடாளுமன்ற உறுப்பினருமான லிம் இந்த குற்றத்தினை செய்ததாகக் கூறப்படுகிறது.

மலேசிய ஊழல் தடுப்பு ஆணையச் சட்டம் 2009- இன் பிரிவு 16 – இன் படி இந்த வழக்குத் தாக்கல் செய்யப்படுகிறது. அதே சட்டத்தின் பிரிவு 24-இன் கீழ் அதிகபட்சமாக 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும், இலஞ்சம் பெற்ற மதிப்பை விட ஐந்து மடங்கு அல்லது 10,000 ரிங்கிட் குறையாத அபராதமும் விதிக்கப்படும்.