Home One Line P1 மஇகா பெர்லிஸ் மாநில முன்னாள் தலைவர் வெங்கடசாமி காலமானார்

மஇகா பெர்லிஸ் மாநில முன்னாள் தலைவர் வெங்கடசாமி காலமானார்

521
0
SHARE
Ad

கங்கார் : மஇகாவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மஇகா பெர்லிஸ் மாநில முன்னாள் தலைவருமான வெங்கடசாமி சுப்பிரமணியம் இன்று திங்கட்கிழமை (ஆகஸ்ட் 10) அதிகாலையில் காலமானார்.

ஒரு வித்தியாசமான அரசியல்வாதியான வெங்கடசாமி தீவிரமாக எழுத்துத் துறையிலும் ஈடுபட்டார். பல சிறுகதைகளையும் எழுதியிருக்கிறார். எழுத்தாளர்களின் சந்திப்பு நிகழ்ச்சிகளிலும், தமிழ் இலக்கிய நிகழ்ச்சிகளிலும் அவரை அடிக்கடி சந்திக்கலாம்.

இறுதிச் சடங்குகள் செவ்வாய்க்கிழமை நடைபெறும்

மறைந்த வெங்கடசாமியின் இறுதிச் சடங்குகள் நாளை செவ்வாய்க்கிழமை ஆகஸ்ட் 11-ஆம் தேதி நண்பகல் 12.30 மணி முதல் நடைபெறும்.

#TamilSchoolmychoice

பெர்லிஸ் மாநிலத்தின் ஆராவ் நகரில் பேங்க் ராயாட் பாவ் பின்புறத்தில் (Belakang Bank Rakyat Pauh) உள்ள அவரது இல்லத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற்று, அதன் பின்னர் ஆராவ், ஜாலான் ராணி எஸ்டேட் மயானத்தில் நல்லடக்கச் சடங்குகள் நடைபெறும்.