Home One Line P1 சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்

சூதாட்டத்திற்காக சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் கைது செய்யப்படுவர்

495
0
SHARE
Ad

கோலாலம்பூர்: காவல் துறை சூதாட்ட கும்பல் மீது மட்டுமல்ல, சட்டவிரோத நோக்கங்களுக்காக தங்கள் சொத்துக்களை வாடகைக்கு விடும் உரிமையாளர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கும்.

“இதற்கு முன்னர், எங்கள் கவனம் இந்த கும்பல் மீது இருந்தது, ஆனால் இப்போது சட்டவிரோத சூதாட்டத்துடன் தொடர்புடைய அனைவருக்கும் எதிராக, அவர்களின் வணிக உரிமங்களை துஷ்பிரயோகம் செய்த வளாகங்களின் உரிமையாளர்கள் உட்பட நாங்கள் நடவடிக்கை எடுப்போம்” என்று புக்கிட் அமான் தலைமை இயக்குனர் டத்தோ ஹுசிர் முகமட் கூறினார்.

குற்றத் தடுப்புச் சட்டம் (போகா) மற்றும் பணமோசடி தடுப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு நிதிச் சட்டம் (அம்லாப்டா) ஆகியவற்றின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

“சில சூதாட்ட கும்பல்கள் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்கியுள்ளதால், இந்த இரண்டு சட்டங்களையும் பயன்படுத்துவதை நாங்கள் தீவிரமாக பரிசீலித்து வருகிறோம்.

“புக்கிட் அமான் காவல் துறை அதிகாரிகள், கடந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து சட்டவிரோத இணைய சூதாட்டத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. ஆனால் இந்த நடவடிக்கை நாடு முழுவதும் திரும்பியுள்ளது, குறிப்பாக சிலாங்கூரில்,” என்று அவர் ஞாயிற்றுக்கிழமை கூறினார்.

“சட்டவிரோத சூதாட்டகும்பல்களுடன் தொடர்பில் இருப்பவர்களின் வணிக உரிமங்களை இரத்து செய்ய ஊராட்சி மன்றங்களுக்கு நாங்கள் பரிந்துரைக்கிறோம் ” என்று ஹுசிர் கூறினார்.

“சட்டவிரோத சூதாட்ட வலையமைப்பை நாங்கள் அழிக்க முடியும் என்று நான் நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சட்டவிரோத சூதாட்ட நடவடிக்கைகள் குறித்து காவல் துறையினருக்கு அறிவிக்குமாறு ஹுசிர் மக்களை கேட்டுக்கொண்டார். இதனால் உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும்.

சனிக்கிழமை (ஆகஸ்டு 8), பண்டார் பாரு சுங்கை பூலோவில் சட்டவிரோத சூதாட்டம் மற்றும் சட்டவிரோத சிகரெட்டுகள் விற்பனை செய்யப்படுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகங்களில் பரலாகின.