கோலாலம்பூர்: பள்ளி குழந்தைகளுக்கு முகக்கவசங்களுக்கு மாற்றாக “முழு முகக் கவசம்” பயன்படுத்த முடியுமா என்பதை அரசாங்கம் ஆராய்ந்து வருகிறது என்று அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.
முகக்கவசங்களை வாங்க முடியாதவர்களின் சுமையைத் தணிக்க இந்த விவகாரம் சுகாதார அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது என்று அவர் கூறினார்.
“முழு முகக் கவசம்” நாம் ஒரு முறை மட்டுமே வாங்க முடியும், அதை கழுவலாம் அல்லது சுத்தம் செய்யலாம் மற்றும் நான்கு முதல் ஐந்து மாதங்கள் வரை பயன்படுத்தலாம்.
“நாங்கள் சுகாதார அமைச்சிடம் இதனை கவனிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என்று செய்தியாளர் கூட்டத்தில் அவர் இன்று கூறினார்.
அதைத் தவிர, முழு முகக் கவசங்களை அணியாமல் பர்தா அணிந்தவர்களை கருத்தில் கொள்ளவும் சுகாதார அமைச்சு கேட்டுக் கொள்ளப்பட்டதாகவும், அனைத்து பரிசீலனைகளும் அங்கீகரிக்கப்பட்டால், அது பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
முகக்கவசங்களைப் பயன்படுத்துவது பள்ளியில் படிப்பவர்களுக்கு கட்டாயமில்லை, ஆனால், அவ்வாறு பயன்படுத்தப்படுவது ஊக்களிக்கப்படுகிறது.