புது டில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொவிட்19 தொற்றால் 62,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதன் மூலமாக, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 22 இலட்சத்தைக் கடந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.
இந்த தொற்றின் காரணமாக மரணமுற்றவர்களின் எண்ணிக்கை 44,386- ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொவிட்19 தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களில் 15.3 இலட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.
நேற்று, நாண்காவது நாளாக இந்தியாவில் பாதிப்பு எண்ணிக்கை ஒரே நாளில் 60,000- க்கும் மேல் பதிவாகியுள்ளது.
உலகளவில் அமெரிக்கா, பிரேசிலை தொடர்ந்து, இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. கடந்த ஆறு நாட்களாக அமெரிக்கா, பிரேசிலை விட பாதிப்பு எண்ணிக்கை இந்தியாவில் அதிகம் பதிவாகி வருகிறது.
மகாராஷ்டிரா (12,248), ஆந்திரா (10,820), தமிழகம் (5,994), கர்நாடகா (5,985), உத்தர பிரதேசம் (4,571), பீகார் (4,157) மேற்குவங்கம் (2,939) உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் கடந்த 24 மணி நேரத்தில் 75 விழுக்காட்டிற்கும் அதிகமான புதிய தொற்றுநோய்கள் பதிவாகியுள்ளன.