Home One Line P1 பெர்லிசில், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு கிராம மக்களும் பரிசோதிக்கப்படுவர்

பெர்லிசில், கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இரு கிராம மக்களும் பரிசோதிக்கப்படுவர்

493
0
SHARE
Ad

கோலாலம்பூர்: தற்போது மீட்சிக்கான மேம்படுத்தப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு உத்தரவின் கீழ், கொவிட் 19 பரிசோதனைகள் பெர்லிஸ், சாங்லாங்கில் உள்ள இரண்டு கிராமங்களில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் நடத்தப்படும்.

“பாதிக்கப்பட்ட பகுதியில் உள்ள அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் சுகாதார அதிகாரிகள் கொவிட் 19 பரிசோதனை செய்வார்கள்” என்று அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார்.

பாதிக்கப்பட்ட இரண்டு கிராமங்களான கம்போங் கோலா சாங்லாங் மற்றும் கம்போங் தானா திம்புல் ஆகிய இடங்களில் இந்த பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும். இது மொத்தமாக, 1,063 வீடுகளை உள்ளடக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

சிவகங்கா தொற்றுக் குழுவுடன் தொடர்புடைய சம்பவங்கள் காரணமாக இது ஏற்படுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார்.

இந்த கட்டுப்பாட்டின் கீழ், மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படுவதாக இஸ்மாயில் சப்ரி கூறினார். அத்தியாவசிய பொருட்களை விற்கும் கடைகள் மற்றும் எடுத்துச் செல்லும் சேவைகளை வழங்கும் உணவகங்கள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படுகின்றன.

பள்ளிகள் மற்றும் அரசு அலுவலகங்கள் மூடப்படும் என்றும், மசூதிகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படாது என்றும் அவர் கூறினார்.

“கட்டுப்பாட்டின் போது பகுதிக்கு வெளியேயும், உள்ளேயும் மக்கள் நடமாட்டம் அனுமதிக்கப்படாது” என்று இஸ்மாயில் சப்ரி கூறினார்.