Home One Line P2 நிக்கி கல்ராணிக்கும் கொவிட்-19 தொற்று

நிக்கி கல்ராணிக்கும் கொவிட்-19 தொற்று

598
0
SHARE
Ad

சென்னை – இந்தியாவில் அரசியல்வாதிகள், நட்சத்திரங்கள் என அனைவரையும் பேதமின்றித் தாக்கி வரும் கொவிட்-19 தொற்று ஆகக் கடைசியாக நடிகை நிக்கி கல்ராணியையும் தொற்றியுள்ளது.

வடக்கே அமிதாப் பச்சான் முதற்கொண்டு அவரது மருமகள் ஐஸ்வர்யா ராய், மகன் அபிஷேக் பச்சான், பேத்தி ஆராத்யா வரை கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டனர். மேலும் பல நட்சத்திரங்களும் பாதிக்கப்பட்டனர்.

தெற்கே, விஷால், இயக்குநர் ராஜமௌலி, கருணாஸ் என பலரையும் தாக்கியது கொவிட் தொற்று.

#TamilSchoolmychoice

இந்த வரிசையில் ஆகக் கடைசியாக நிக்கி கல்ராணிக்கும் கொவிட் தொற்று பீடித்துள்ளது.

ஜிவி பிரகாஷூடன் “டார்லிங்” படத்தில் நடித்த நிக்கி கல்ராணி ஆகக்  கடைசியாக ஜீவாவுடன் “கீ” என்ற படத்தில் நடித்திருந்தார். மேலும் சில தமிழ்ப் படங்களிலும் நாயகியாக நடித்திருக்கிறார் நிக்கி கல்ராணி.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதை நிக்கி கல்ராணி தெரிவித்திருக்கிறார். தற்போது குணமடைந்து வருவதாகவும் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குறிப்பிட்டார்.