Home One Line P1 கொவிட்19: கெடாவில் மேலும் ஒரு தொற்றுக் குழு, 9 பேர் பாதிப்பு

கொவிட்19: கெடாவில் மேலும் ஒரு தொற்றுக் குழு, 9 பேர் பாதிப்பு

478
0
SHARE
Ad

noor-hisham-health-min-07072020கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15 புதிய கொவிட்19 தொற்று சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு நேற்று வியாழக்கிழமை தெரிவித்தது.

இதைத் தொடர்ந்து நாட்டின் மொத்த கொவிட்19 பாதிப்பு எண்ணிக்கை 9,129-ஆக உயர்ந்துள்ளது.

புதிதாக அடையாளம் காணப்பட்ட 15 சம்பவங்களில் 4 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள் ஆவர். மேலும், 11 பேர் உள்நாட்டிலேயே தொற்றுக் கண்டுள்ளனர். கெடாவில் தாவார் தொற்றுக் குழுவில் 9 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

இன்று 4 பேர் குணமடைந்து வீட்டிற்கு செல்ல அனுமதிக்கப்பட்ட நிலையில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 8,821 -ஆக உயர்ந்துள்ளது.

நாட்டில் மொத்தம் 183 பேர் இன்னும் மருத்துவமனைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் இருவர் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.