Home உலகம் அரசியல் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டும்!- சரத் பொன்சேகா

அரசியல் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டும்!- சரத் பொன்சேகா

672
0
SHARE
Ad

ponsekoஇலங்கை, ஏப்ரல் 15- இலங்கையில் அரசில் அமைப்பு உடனடியாக திருத்தியமைக்கப்பட வேண்டுமெனவும், மாதுலுவே சோபித தேரரினால் முன்வைக்கப்பட்டுள்ள அரசியலமைப்பு திருத்தங்களை அமுல் செய்ய வேண்டும் எனவும் முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இல்லாதொழித்தல் உள்ளிட்ட முக்கியமான சில பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ரத்து செய்தல், விருப்பு வாக்கு முறைமையை இல்லாதொழித்தல் ஆகிய பரிந்துரைகளுக்கு முழு அளவில் ஆதரவளிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

இதேவேளை, பிரபாகரனின் இளைய மகன் பாலசந்திரனை இராணுவத்தினர் கைது செய்யவில்லை என குறிப்பிட்டுள்ள அவர், பிரபாகரனின் மனைவி, மகள் மற்றும் இளைய மகன் பற்றிய தகவல்கள் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.