கோலாலம்பூர், ஏப்ரல்-16 – வரும் பொதுத்தேர்தலில் கேலாங் பாத்தா தொகுதியில் லிம் கிட் சியாங் வெற்றி பெற்றால் சீனர்கள் – மலாய்க்காரர்கள் இடையே பிரச்சினை வெடிக்கும் என்றும், அதனால் லிம்மை ஜெயிக்க வைக்கக் கூடாது என்று இணையத் தளத்தின் வழி முன்னாள் பிரதமர் துன் மகாதீர் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த லிம் கிட் சியாங் தான் இனவாதத்தை தூண்டி குழப்பத்தை ஏற்படுத்துகிறேன் என்ற மகாதீரின் பேச்சுக்கு அவர் மீது தேசநிந்தனைச் சட்டம் பாய வேண்டும் என்றார்.
மகாதீர் கூறியிருக்கும் அவதூறுகளை மீட்டுக் கொள்ளாவிட்டால் அவர் மீது வழக்கு தொடருவேன் என்றும் லிம் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில் லிம் கிட் சியாங்கை எதிர்த்து ஜோகூர் மாநிலத்தின் நடப்பு மந்திரி பெசார் அப்துல் கனி ஒத்மான் நிறுத்தப்படுவது உறுதியாகியுள்ளது.