Home 13வது பொதுத் தேர்தல் ஷாஆலம் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி தேர்வு

ஷாஆலம் தொகுதிக்கு தேசிய முன்னணி வேட்பாளராக சுல்கிப்ளி தேர்வு

595
0
SHARE
Ad

Zulkifli Noordinகோலாலம்பூர், ஏப்ரல் 16 – ஷாஆலம் தொகுதியில் நடப்பு நாடாளுமன்ற உறுப்பினரான பாஸ் கட்சியின் காலிட் அப்துல் சமத்தை எதிர்த்துப் போட்டியிட,தேசிய முன்னணி வேட்பாளராக பெர்க்காசா துணைத் தலைவர் சுல்கிப்ளி நோர்டின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இத்தகவலை தேசிய முன்னணி தலைவர் மற்றும் காபந்து பிரதமரான நஜிப் துன் ரசாச் இன்று காலை அறிவித்தார்.

அதோடு, செபாங் தொகுதியின் தேசிய முன்னணி ஒருங்கிணைப்பாளரான முகமத் சின் முகமத்தும், தஞ்சுங் காராங் தொகுதியில் விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில் துறை அமைச்சரான நோ ஓமாரும் மீண்டும் தங்கள் நடப்பு தொகுதியிலேயே போட்டியிடுவார்கள் என்று நஜிப் அறிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

சுல்கிப்ளி நோர்டின் கடந்த 2008 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் கூலிம் பண்டார் பாரு நாடாளுமன்ற தொகுதியில் பிகேஆர் சார்பாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தேர்தலுக்குப் பிறகு அக்கட்சியிலிருந்து விலகி, அம்னோ சார்பு அமைப்பான பெர்காசாவுடன் இணைந்து தன்னை ஒரு சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினராக அறிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை, கடந்த 2008 ஆம் ஆண்டு தேர்தலில் ஷாஆலம் தொகுதியில் பாஸ் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட காலிட் அப்துல் சமத், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட தேசிய முன்னணி வேட்பாளரான அப்துல் அஸீஸ் சம்சுதீனை விட 9,314 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார்.