Home கலை உலகம் ராகாவின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

ராகாவின் சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள்

664
0
SHARE
Ad

கோலாலம்பூர் : நாட்டின் முன்னணி வானொலியான ராகாவின் அடுத்த சில நாட்களுக்கான சிறப்பு நிகழ்ச்சிகள் குறிப்பாக சுதந்திர தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்த விவரங்கள் பின்வருமாறு:

செவ்வாய், 25 ஆகஸ்ட்

நேர்காணல்: மலேசியா-எவரெஸ்ட் திட்டம் 97

ராகா, காலை 6 மணி முதல் 10 மணி வரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

#TamilSchoolmychoice

விருந்தினர்: டத்தோ எம்.மகேந்திரன் & டத்தோ என்.மோகனதாஸ்

மலேசியாவின் முதல் எவரெஸ்ட் மலை ஏறியவர்களான டத்தோ எம். மகேந்திரன் மற்றும் டத்தோ என். மோகனதாஸ் ஆகியோர் தங்களின் இனிமையான அனுபவங்கள் மற்றும் தருணங்களைப் பகிர்ந்துக் கொள்ளும் ஒரு அற்புதமான நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம்.

புதன், 26 ஆகஸ்ட்

நேர்காணல்: பிக் பாஸை வென்ற முதல் மலேசியர்

ராகா, காலை 6 மணி முதல் 10 மணி வரை | SYOK செயலியில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: முகேன் ராவ்

மலேசியாவின் முதல் பிக் பாஸ் சீசன் 3 (ஸ்டார் விஜய் ஒளிபரப்பிய ரியாலிட்டி ஷோ) சாம்பியனான முகேன் ராவ் 100 நாட்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம். மலேசியர்களை பெருமைப்படுத்திய ஓர் அனைத்துலக நிகழ்ச்சியின் வெற்றியாளராக வாகை சூடுகையில் அவர் எப்படி உணர்ந்தார் என்பதையும் பகிர்ந்துக் கொள்வார்.

வியாழன், 27 ஆகஸ்ட்

மலேசியாவை பெருமைப்படுத்திய ஒருவரை உங்களுக்குத் தெரியுமா?

ராகா இன்ஸ்டாகிராம்

இன்ஸ்டாகிராம் மூலம் மலேசியாவை பெருமைப்படுத்தியவர்களை இரசிகர்கள் பரிந்துரைப்பதோடு ராகாவையும் டேக் (tag) செய்ய வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட வேட்பாளர்கள் ‘கலக்கல் காலை’ நிகழ்ச்சியின் போது இடம் பெறுவர்.

வெள்ளி, 28 ஆகஸ்ட்

நேர்காணல்: “மலாக்கா இரயில் பாதைக் குழந்தைகளில்” தப்பிப் பிழைத்தவர்

ராகா, காலை 6.00 மணி முதல் 10.00 மணிவரை| SYOK செயலியில் பதிவிறக்கம் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழுங்கள்.

விருந்தினர்: பாப்பாத்தி ராஜு

“மலாக்கா இரயில் பாதைக் குழந்தைகளில்” தப்பிப்பிழைத்தவரான 95 வயதான பாபாத்தி ராஜு தனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு சுவாரசியமான நேர்காணலை இரசிகர்கள் கேட்டு மகிழலாம். ஆகஸ்ட் 31-ஆம் தேதி ராகாவின் சமூக ஊடகங்களான முகநூல்  மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக இரசிகர்கள் அவரது உணர்ச்சிகரமான காணொளியைக் கண்டு மகிழலாம்.

* நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள் மற்றும் அதன் விபரங்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை