Home One Line P2 ஆஸ்ட்ரோ: புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘சொல்லி தொல’ முதல் ஒளிபரப்பாக ஒளியேறுகிறது

ஆஸ்ட்ரோ: புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘சொல்லி தொல’ முதல் ஒளிபரப்பாக ஒளியேறுகிறது

731
0
SHARE
Ad

கோலாலம்பூர் : செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டி (அலைவரிசை 231) தொலைக்காட்சி அலைவரிசையிலும், ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாகவும் புதிய உள்ளூர் தமிழ் தொடர் ‘சொல்லி தொல’ ஒளியேறி வருகிறது.

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் செப்டம்பர் 5, இரவு 8 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்பாக ஒளியேறும் “சொல்லி தொல” புதிய உள்ளூர் தமிழ் நகைச்சுவைத் தொடரைக் கண்டு களிக்கலாம். சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்கள் ஒவ்வொரு சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அதே நேரத்தில் ஒளியேறும்.

முந்தைய தொடர்களை பார்க்கத் தவறியவர்கள் அவற்றை ஆன் டிமாண்ட் வழியாக பார்த்து மகிழலாம்.

#TamilSchoolmychoice

உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் ரவீன்தாஸ் இயக்கத்தில் மலர்ந்த இந்த  நகைச்சுவைத் தொடர் 20 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. இத்தொடரில் யுவராஜ், ஜே.கே. விக்கி, ஹம்ஸ்னி, விடியாலியானா, அல்வின், நவீன் ஹோ மற்றும் லோகன் உள்ளிட்ட பிரபலமான உள்ளூர் கலைஞர்கள் நடித்துள்ளனர். நகைச்சுவையுடன் கலந்த அமானுஷ்யக் கூறுகளை உள்ளடக்கிய சொல்லி தொல தொடர் நிச்சயமாக இரசிகர்களைக் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.

தனது அகால மரணத்திற்குப் பிறகு ‘ஆவிகளின் பரிமாணத்தில்’ (spirit dimension) நுழையும் இளைஞர் யுவாவைப் (யுவராஜ்) பற்றிய சுவாரசியமானக் கதையை இத்தொடர் சித்தரிக்கின்றது. பூமியில் வாழும் மனிதர்களைப் போலவே ஆவிகளுக்கும் ஓர் உலகம் இருப்பதைக் கண்டறிந்தப் பின் அவர் அதிர்ச்சிக்குள்ளாகிறார். யுவா மற்றும் அவரது பிற வேடிக்கையான பேய் நண்பர்கள் எதிர்நோக்கும் சோதனைகள் மற்றும் இன்னல்கள் மயானத்தை மையமாகக் கொண்ட முக்கியக் கதையோட்டத்தை (crux of the plot) உருவாக்குகின்றன.

அனைத்து வாடிக்கையாளர்களும் எப்போது வேண்டுமானாலும் சொல்லி தொல தொடரின் புதிய அத்தியாயங்களை ஆன் டிமாண்டில் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.