Home One Line P2 ஆஸ்ட்ரோ : உள்ளூர் அழகிப் போட்டி ‘அழகின் அழகி 2020’ முதல் ஒளிபரப்பு

ஆஸ்ட்ரோ : உள்ளூர் அழகிப் போட்டி ‘அழகின் அழகி 2020’ முதல் ஒளிபரப்பு

679
0
SHARE
Ad

கோலாலம்பூர் : அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் இன்று ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 13, இரவு 9 மணி முதல் தொலைக்காட்சி, ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்ட் வழியாக ஆஸ்ட்ரோ விண்மீன் எச்டியில் (அலைவரிசை 231) முதல் ஒளிபரப்பாகும் ‘அழகின் அழகி 2020’ என்ற புதிய உள்ளூர் தமிழ் அழகிப் போட்டியைக் கண்டுக் களிக்கலாம்.

உள்ளூர் மாடல்களின் (models) திறமைகளை வெளிக்கொணரும் ஒரு சிறந்த வாய்ப்புக்களமாக அமைவதோடு அவர்களின் தன்னம்பிக்கையை வளர்த்துக் கொள்ளவும் துணைபுரிகிறது, அழகின் அழகி 2020. புகழ்பெற்ற உள்ளூர் திரைப்படத் தயாரிப்பாளர் மார்ட்டின் ஆர். சந்திரன் இயக்கத்தில் மலர்ந்த அழகின் அழகி 2020, புதிய 9 அத்தியாயங்களைக் கொண்டுள்ளது. திறன்மிக்க பிரபல உள்ளூர் கலைஞர்களான பால கணபதி வில்லியம் மற்றும் சங்கீதா கிருஷ்ணசாமி இப்போட்டியைத் தொகுத்து வழங்குவர். அதுமட்டுமின்றி, பங்குபெறும் 20 போட்டியாளர்களின் வழிகாட்டுனராக (mentor) சங்கீதா கிருஷ்ணசாமி திகழ்வார்.

போட்டியாளர்கள் நான்கு தகுதிச் (எலிமினேஷன்) சுற்றுகளைக் கடந்து செல்ல வேண்டும். தகுதிப் பெற்ற சிறந்த பத்து போட்டியாளர்கள் இறுதிச் சுற்றில் பங்கேற்பர். முக்கிய உள்ளூர் கலைஞர்களான, டத்தின் மணிமாலா, ஸ்ரீ சோனிக் மற்றும் தனுஜா ஆனந்தன் ஆகியோர் அழகின் அழகி 2020 போட்டியின் நீதிபதிகளாவர்.

#TamilSchoolmychoice

அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் அழகின் அழகி 2020 போட்டியின் புதிய அத்தியாயங்களை ஒவ்வொரு ஞாயிறும் இரவு 9 மணிக்கு கண்டு களிக்கலாம். தவறவிட்ட அத்தியாயங்களை ஆஸ்ட்ரோ கோ மற்றும் ஆன் டிமாண்டில் எப்போதும் பதிவிறக்கம் (ஸ்ட்ரீம்) செய்து மகிழலாம்.