Home One Line P1 மக்களின் சுமையைக் குறைக்கும் அரசு தேவை- மொகிதின்

மக்களின் சுமையைக் குறைக்கும் அரசு தேவை- மொகிதின்

612
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: கொவிட்19 தொற்றுநோயை அடுத்து மக்களின் சுமையை குறைக்க உதவும் ஒரு மாநில அரசு சபாவுக்கு தேவை என்று பிரதமர் மொகிதின் யாசின் இன்று தெரிவித்தார்.

தொற்றுநோய்களின் போது மக்களுக்கு உதவுவதில் தமது திறனை நிரூபித்துள்ள தேசிய கூட்டணி தலைமையிலான மத்திய அரசாங்கத்துடன் இணைந்த ஓர் அரசாங்கத்தை சபா மக்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று அவர் கூறினார்.

“சபாவின் பொருளாதாரம் வேகமாக மீட்கப்பட வேண்டும். முகமட் ஷாபி அப்டால் எதையும் கொடுக்கவில்லை என்று நான் கூறவில்லை, ஆனால் அது போதுமானதாக இல்லை, ஏனெனில் மத்திய அரசாங்கத்துடன் ஒத்துழைப்பு இல்லை, ” என்று அவர் மக்களுடனான சந்திப்பில் கூறினார்.

#TamilSchoolmychoice

இதே போன்ற நேற்றைய நிகழ்ச்சியில், நிர்வாக மற்றும் மேம்பாட்டு விஷயங்களுக்கு வசதியாக மத்திய அரசுக்கு இணையான சபா மாநில அரசை வாக்காளர்கள் தேர்வு செய்ய வேண்டும் என்று பிரதமர் கூறியிருந்தார்.

“அரசாங்கத்தை தீர்மானிக்க எனக்கு உரிமை இல்லை. ஆனால், உங்களுக்கு உரிமை உண்டு. இத்தகைய சூழ்நிலையில், பல்வேறு விஷயங்களை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்று கூறப்படும் ஓர் அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதில் வாக்காளர்களின் புத்திசாலித்தனத்தை சபா மாநிலத் தேர்தல் சோதிக்கும் என்று நான் நினைக்கிறேன், ” என்று பிரதமர் மக்களின் முன்னிலையில்  உரையாற்றினார்.

நூற்றுக்கணக்கான பங்கேற்பாளர்களுக்கு முன்னால் பேசிய பிரதமர், தொற்றுநோய்களின் போது நாட்டை நிர்வகிப்பதில் தற்போதைய தேசிய கூட்டணி அரசாங்கத்தின் அனுபவத்தையும் மொகிதின் பகிர்ந்து கொண்டார்.