Home One Line P1 முன்னாள் அமைச்சரின் உதவியாளர் 6 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்

முன்னாள் அமைச்சரின் உதவியாளர் 6 ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குகிறார்

509
0
SHARE
Ad

ஷா ஆலாம்: முன்னாள் அமைச்சரின் முன்னாள் அரசியல் உதவியாளர் ஊழல் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளுக்காக இங்குள்ள அமர்வு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

முன்னாள் சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சர் டத்தோ முகமடின் கெத்தாபியின் மூத்த அந்தரங்கச் செயலாளராக இருந்த முகமட் சைபுல்லா முகமட் மிங்கு 29, ரொனால்ட் செதோ காங் செங்கிடமிருந்து 106,500 ரிங்கிட் தொகையை இலஞ்சமாகக் கோரியதாக குற்றம் சாட்டப்பட்டது.

முதல் மூன்று குற்றச்சாட்டுகளுக்கு, அமைச்சகத்திலிருந்து வணிக மற்றும் விளம்பர இடத்திற்கான ஒப்பந்தங்களைப் பாதுகாக்க உதவ 90,000 ரிங்கிட் இலஞ்சம் பெற்றதாக சைபுல்லா மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

மீதமுள்ள மூன்று குற்றச்சாட்டுகளுக்கு, கோலாலம்பூரின் ஜாலான் கியா பெங்கின் உள்ள விபோட் ரெசிடென்ஸில் ஒரு சொத்தின் வாடகை வைப்புக்காக செதோவிடம் இருந்து 16,500 ரிங்கிட் கோரியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அவர் இந்த குற்றங்களை 2018 டிசம்பர் 21 மற்றும் 2019 மார்ச் 30- க்கு இடையில், செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

நீதிபதி ரோசிலா சல்லே முன்னிலையில் தம்மீதான குற்றங்களை மறுத்த சைபுல்லா விசாரணைக் கோரினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், சைபுல்லாவுக்கு 20 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம். 10,000 ரிங்கிட் அபராதம் அல்லது அதை விட ஐந்து மடங்கு குறையாமல் அபராதம் விதிக்கப்படலாம்.