Home One Line P2 ரூத் பேடர் கின்ஸ்பர்க்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி புற்றுநோயால் காலமானார்

ரூத் பேடர் கின்ஸ்பர்க்: அமெரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதி புற்றுநோயால் காலமானார்

692
0
SHARE
Ad

வாஷிங்டன்: பெண்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த, அமெரிக்க உச்சநீதிமன்ற நீதிபதி ரூத் பேடர் கின்ஸ்பர்க், தனது 87 வயதில் புற்றுநோயால் காலமானார் என்பதை அமெரிக்க நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

ஜின்ஸ்பர்க் வாஷிங்டனில் உள்ள அவரது வீட்டில் மெட்டாஸ்டேடிக் கணைய புற்றுநோயால் வெள்ளிக்கிழமை அவர் மரணமுற்றார். அவரது குடும்பத்தினரால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில், கின்ஸ்பர்க் புற்றுநோய்க்கான சிகிச்சைக்குத் தொடர்ந்து உட்படுத்தப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

அவர் அமெரிக்காவில் முக்கிய பெண்ணியவாதியாகவும், தாராளவாதிகளுக்கு ஒரு தலைவராகவும் இருந்தார்.

நாட்டின் மிக உயர்நீதிமன்றத்தில் 27 ஆண்டுகள் பணியாற்றிய கின்ஸ்பர்க் உச்சநீதிமன்றத்தில் மிகப் பழமையான நீதிபதியாக இருந்துள்ளார்.

“நம் நாட்டின் வரலாற்றை நாம் இழந்துவிட்டோம்” என்று தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் வெள்ளிக்கிழமை ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.