புத்ரா ஜெயா : இன்று புதன்கிழமை பிற்பகல் 2.30 மணியளவில் தொலைக்காட்சி வழி பிரதமர் மொகிதின் யாசின் முக்கிய உரையொன்றை நிகழ்த்தவிருக்கிறார் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது.
பிகேஆர் கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிம் நண்பகல் அளவில் தனது பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தவிருக்கும் நிலையில், மொகிதினின் இந்த அறிவிப்பு மலேசிய அரசியல் களத்தை மேலும் பரபரப்பாக்கியுள்ளது.
தனக்கு நாடாளுமன்றப் பெரும்பான்மை இருப்பதாக அன்வார் இப்ராகிம் அறிவித்தால் அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றத்தைக் கலைத்து 15-வது பொதுத் தேர்தலுக்கு வழிவிடும் முடிவை பிரதமர் மொகிதின் யாசின் அறிவிப்பார் என்ற ஆரூடமும் எழுந்துள்ளது.
மொகிதினின் அறிவிப்பு ஆர்டிஎம், பெர்னாமா தொலைக்காட்சி, டிவி3, ஆஸ்ட்ரோ அவானி ஆகிய ஊடகங்களின் வழி நேரலையாக ஒலி, ஒளிபரப்பாகும்.
மீண்டும் இன்று இரவு 9.00 மணிக்கு மொகிதின் யாசினின் உரை மறு ஒலி, ஒளிபரப்பாக இடம் பெறும்.