கோத்தா கினபாலு: மத்திய அரசுடன் இணைந்து மாநில அரசாங்கம் தொடர்ந்து முன்னேற விரும்புகிறீர்களா அல்லது நேர்மாறாக இருக்க விரும்புகிறீர்களா என்பதை இனி சபா மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்று டான்ஸ்ரீ மொகிதின் யாசின் கூறினார்.
நிலைமையை சரிசெய்யவும், நாளை மாநிலத் தேர்தலில் சிறந்த முன்னேற்றத்தை அடைவதற்கான திசையைத் தேர்வுசெய்யவும் சபா மக்களுக்கு உரிமை உண்டு என்று அவர் கூறினார்.
இன்று கோத்தா கினாபாலுவில் நடந்த சபா மாநிலத் தேர்தலில் தேசிய கூட்டணிப் பிரச்சார சுற்றுப்பயணத் தொடரின் கடைசி நிகழ்ச்சியில் உரையாற்றியபோது, ”நான் கோரிக்கை வைக்க முடியும், ஆனால், கட்டாயப்படுத்த முடியாது” என்று அவர் கூறினார்.
ஒரு முக்கியமான நேரத்தில் ஆதரவு தேவைப்படும்போது அவருடன் தொடர்ந்து போராடுவேன் என்ற உறுதிமொழியை அவரது நண்பர் முகமட் ஷாபி நிறைவேற்றாததது, மொகிதினுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாகக் கூறினார்.
இதற்கிடையில், விரைவான வளர்ச்சி, விரிவான வேலை வாய்ப்புகள், தொலைத்தொடர்பு வசதிகள் மற்றும் ஒரு விரிவான இணையம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் சபா மாநிலம் ஒரு சிறந்த மாநிலமாக மாறும் என்று பிரதமர் நம்புகிறார்.
“இது எனது லட்சியம்” என்று அவர் கூறினார்.
எவ்வாறாயினும், மக்கள் தேசிய கூட்டணி அரசாங்கத்துடன் ஒன்றாக இருக்க தேர்வு செய்தால் மட்டுமே இந்த விஷயத்தை நினைவாக்க இயலும் என்று அவர் கூறினார்.