Home One Line P1 கொவிட்19: புதிதாக 111 சம்பவங்கள் பதிவு

கொவிட்19: புதிதாக 111 சம்பவங்கள் பதிவு

483
0
SHARE
Ad

கோலாலம்பூர்: நாட்டில் இன்று 111 புதிய கொவிட் -19 சம்பவங்கள் இருப்பதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

புதிய சம்பவங்களில், 97 சபாவில் கண்டறியப்பட்டன. 74 பங்காவ்-பங்காவ் தொற்றுக் குழுவிலிருந்தும், 13 பேர் பெந்தேங் தொற்றுக் குழுவிலிருந்தும் கண்டறியப்பட்டனர்.

கெடாவில் சுங்கை தொற்றுக் குழுவில் இருந்து ஏழு சம்பவங்கள் உட்பட எட்டு சம்பவங்கள் கண்டறியப்பட்டன.

#TamilSchoolmychoice

புதிய நோய்த்தொற்றுகளால் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 10,687 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 133 ஆகவும் உள்ளது.

இன்று புதிதாக 30 பேர் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையிலும் மொத்தமாக 9,696 பேர் இந்த தொற்றிலிருந்து முழுமையாகக் குணமடைந்துள்ளனர். நான்கு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், மூவருக்கு சுவாசக் கருவி உதவி தேவைப்படுகிறது.