Home One Line P1 தேர்தலை முன்னிட்டு சபாவில் செப். 26 பொது விடுமுறை

தேர்தலை முன்னிட்டு சபாவில் செப். 26 பொது விடுமுறை

488
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா மாநில தேர்தலை முன்னிட்டு, அனைத்து மக்களும் தங்கள் கடமையை நிறைவேற்ற, நாளை சனிக்கிழமை சபாவில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சபா விடுமுறை கட்டளைச் சட்டத்தின் 9- வது பிரிவு (சபா அத்தியாயம் 56) அடிப்படையில் பொது விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டதாக முதல்வர் டத்தோஸ்ரீ முகமட் ஷாபி அப்டால் தெரிவித்தார்.

தேர்தல் ஆணையத்தின் தேர்தல் இயக்கத்தின் நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறைக்கு இணங்குமாறு பொதுமக்கள் மீண்டும் நினைவூட்டப்படுகிறார்கள் என்று அவர் இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

மொத்தம் 1.12 மில்லியன் வாக்காளர்கள் நாளை வாக்களிக்க உள்ளனர். 73 தொகுதிகளில் 15 கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 447 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.