Home One Line P1 சபா தேர்தல்: ஜிஆர்எஸ் சபா மாநிலத்தைக் கைப்பற்றியது – ஹம்சா சைனுடின்

சபா தேர்தல்: ஜிஆர்எஸ் சபா மாநிலத்தைக் கைப்பற்றியது – ஹம்சா சைனுடின்

505
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: காபுங்கான் ராக்யாட் சபா (ஜிஆர்எஸ்), வாரிசான் பிளாசிடமிருந்து சபா மாநில ஆட்சியைக் கைப்பற்றியுள்ளதாக, பெர்சாத்து பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இன்று இரவு அறிவித்தார்.

பெரிகாத்தான் நேஷனல், தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் கூட்டணி புதிய 73 தொகுதிகளைக் கொண்ட மாநில சட்டமன்றத்தில் சிறிய பெரும்பான்மையான 37 தொகுதிகளைக் கடந்துவிட்டது என்று அவர் கூறினார்.

“அதிகாரப்பூர்வமற்ற முறையில் நாங்கள் மாநிலத்தை கைப்பற்றப் போகிறோம். ஆனால், சில நிமிடங்கள் காத்திருக்கவும். எல்லோரும் முதலில் உறுதி செய்யவதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். பின்னர் நாங்கள் ஓர் அறிவிப்பை வெளியிடுவோம் ”என்று அவர் இன்று இரவு தேசிய கூட்டணி தேர்தல் தலைமையகத்தில் கூறினார்.

#TamilSchoolmychoice

தற்போதைய நிலவரப்படி வாரிசான் பிளாஸ் 22 தொகுதிகளிலும், தேசிய கூட்டணி, தேசிய முன்னணி 37 தொகுதிகளிலும், சுயேச்சை 2 தொகுதிகள், உஸ்னோ ஒரு தொகுதியில் முன்னணியில் உள்ளனர்.