Home One Line P1 சபா நட்சத்திரத் தொகுதிகள்: சுலாமான் – ஹாஜிஜி வெற்றி! முதலமைச்சர் ஆவாரா?

சபா நட்சத்திரத் தொகுதிகள்: சுலாமான் – ஹாஜிஜி வெற்றி! முதலமைச்சர் ஆவாரா?

404
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : சபா பெர்சாத்து கட்சியின் தலைவர் டத்தோ ஹாஜிஜி நூர் எட்டாவது தடவையாக சுலாமான் சட்டமன்றத்தில் வெற்றி பெற்றார்.

5,919 வாக்குகள் பெற்ற ஹாஜிஜி, 3,099 வாக்குகள் பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். கடந்த 7 தடவைகளிலும் அவர் தேசிய முன்னணி சின்னத்தில் போட்டியிட்டு வென்றார்.

ஆனால் இந்த முறை அவர் தேசியக் கூட்டணி (பெரிக்காத்தான் நேஷனல்) சின்னத்தில் போட்டியிட்டார். அதனால், அவர் மீண்டும் வெற்றி பெறுவாரா என்ற ஐயம் நிலவியது.

#TamilSchoolmychoice

எனினும் மும்முனைப் போட்டியில் அவர் வெற்றி பெற்றிருக்கிறார்.

அவரை எதிர்த்துப் போட்டியிட்ட வாரிசான் கட்சியின் டத்தோ அலியாஸ்கார் பாஸ்ரி 2,820 வாக்குகள் மட்டுமே பெற்றார். பிசிஎஸ் என்னும் பார்ட்டி சிந்தா சபா கட்சியின் சார்பில் ரெக்கான் ஹூசேன் 253 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

தேசியக் கூட்டணி சார்பில் ஹாஜிஜி வெற்றி பெற்றால் அவரே அடுத்த முதலமைச்சர் என பிரதமர் மொகிதின் யாசின் பிரச்சாரத்தின் போது அறிவித்தார்.

65 வயதான ஹாஜிஜி அடுத்த முதலமைச்சர் என்பதில் அம்னோ, தேசிய முன்னணி உறுப்பியக் கட்சிகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவிக்கவில்லை.

“சபா மாநிலத் தேர்தல் முடிந்தவுடன்  சபா மாநில முதல்வரை அனைவரும் ஒருமித்த கருத்துடன் முடிவெடுப்போம். இப்பொழுதே அளவுக்கதிகமான நம்பிக்கையை நாம் வெளியே காட்டக்கூடாது. முதலில் கட்சி ரீதியாக வெற்றி பெற்று பெரும்பான்மையான தொகுதிகளை கைப்பற்றுவது தான் நமது குறிக்கோள். முதலமைச்சரை பின்னர் முடிவு செய்து கொள்ளலாம்” என அம்னோ தலைவர் சாஹிட் ஹாமிடி, மொகிதினுடன் முரண்பட்டு கருத்து தெரிவித்திருந்தார்.