Home One Line P1 சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி

சபா நட்சத்திரத் தொகுதிகள் : லாமாக் – புங் மொக்தார் வெற்றி

660
0
SHARE
Ad

கோத்தா கினபாலு: சபா அம்னோ – தேசிய முன்னணி தலைவர் புங் மொக்தார் ராடின் மாநில சட்டமன்றத் தேர்தலில் லாமாக் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

தேசிய கூட்டணி, தேசிய முன்னணி மற்றும் பிபிஎஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டணி இன்று இரவு குறுகிய பெரும்பான்மையில் வெற்றிப் பெற்றது என்று அவர் கூறினார்.

லாமாக் தொகுதியில் 5 முனைப் போட்டியை புங் மொக்தார் எதிர்நோக்கினார். அவருக்கு 3,035 வாக்குகள் கிடைத்தன. அவரை எதிர்த்து வாரிசான் சார்பில் போட்டியிட்ட முகமட் இஸ்மாயில் ஹாஜி அயோப் 2,374 வாக்குகள் பெற்றார். இதைத் தொடர்ந்து 661 வாக்குகள் பெரும்பான்மையில் புங் மொக்தார் வெற்றி பெற்றார்.

#TamilSchoolmychoice

பார்ட்டி சிந்தா சபா சார்பில் போட்டியிட்ட ராஸ்மான் பின் மாயா 71 வாக்குகள் மட்டுமே பெற்று வைப்புத் தொகையை இழந்தார்.

மற்றொரு சுயேச்சை வேட்பாளர் 73 வாக்குகள் மட்டுமே பெற்றார். பார்ட்டி பெர்பாடுவான் ராயாட் சபா சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் 61 வாக்குகள் மட்டுமே பெற்றார்.

இதற்கிடையில், பெர்சாத்து கட்சியின் பொதுச் செயலாளர் ஹம்சா சைனுடின் இதே போல் கூட்டணி 37 இடங்களைக் கடந்து குறுகிய பெரும்பான்மைக்கு முன்னேறியதாகக் கூறியிருந்தார்.

வாரிசான் பிளாசிடமிருந்து அரசாங்கத்தின் ஆட்சியைக் கைப்பற்றுவதில் ஜிஆர்எஸ் மீதான நம்பிக்கைக்கு சபாவில் உள்ள வாக்காளர்களுக்கு புங் நன்றி தெரிவித்தார்.

ஆயினும், மலேசியாகினி அகப்பக்கத்தில் வாரிசான் பிளாஸ் கூட்டணி முன்னேறி வருவதைக் காட்டுகிறது. தற்போது, அது 25 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஜிஆர்எஸ் 36 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது. ஆனால், பிரி மலேசியா டுடே அகப்பக்கத்தில் ஜிஆர்எஸ் 38 தொகுதிகளில் முன்னணியில் உள்ளது.