இந்நிலையில் எஸ்பிபியின் நெருங்கிய நண்பரும் அவரது ஆயிரக்கணக்கான பாடல்களுக்கு இசையமைத்தவருமான இளையராஜா திருவண்ணாமலை ஆலயத்திற்கு வருகை தந்து எஸ்பிபிக்காக மோட்ச தீபம் ஏற்றி அன்னாரின் ஆத்மா சாந்தியடைய வழிபாடு நடத்தினார்.
ஏற்கனவே காணொலி வழி கண்ணீர் மல்க பாலாவுக்கு தனது அஞ்சலியை இளையராஜா செலுத்தினார்.
அதுமட்டுமின்றி ஒரே நாளில் எஸ்பி பாலாவுக்கென அஞ்சலிப் பாடல் ஒன்றையும் எழுதி இசையமைத்து ஊடகங்களின் வழி வெளியிட்டார்.
Comments