Home One Line P2 “எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி

“எஸ்பிபி, தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படுவார்” எடப்பாடி பழனிசாமி

1120
0
SHARE
Ad

சென்னை: புகழ்பெற்ற பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் நல்லடக்கச் சடங்குகள் நாளை சனிக்கிழமை சென்னையின் புறநகரில் அமைந்துள்ள தாமரைப்பாக்கத்தில் உள்ள தனது பண்ணை வீட்டு வளாகத்தில் நடைபெறும்.

அவரது நல்லுடல் இன்று வெள்ளிக்கிழமை இரவு தாமரைப்பாக்கத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அவர் நல்லுடல் தாங்கியிருந்த மருத்துவமனை வாகனத்திற்கு வழி நெடுகிலும் அவரது இரசிகர்கள் சாலையோரங்களில் நின்று மரியாதை தெரிவித்தனர்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில், பாலசுப்பிரமணியத்தின் நல்லடக்கச் சடங்கு நாளை தமிழகக் காவல் துறையின் மரியாதையுடன் நடைபெறும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று இரவு அறிவித்தார்.

நுரையீரல் செயலிழப்பு காரணமாக இன்று (செப்டம்பர் 25) எஸ்பிபி, தனது எண்ணற்ற இரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி விட்டு மறைந்தார்.

எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் மகன் எஸ்.பி.சரண், மனைவி சாவித்ரி, சகோதரி ஷைலாஜா மற்றும் மகள் பல்லவி ஆகியோர் இன்று காலை முதல் மருத்துவமனையில் இருந்தனர்.

கமல்ஹாசன் நேற்று மருத்துவமனையில் எஸ்.பி.பியை பார்வையிட்ட வேளையில்,  ​​பாரதிராஜா இன்று காலை அவரைச் சென்று கண்டார்.

எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் அகால மரணம் தென் திரையுலகிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகத் தொழில்துறையின் பல பிரபலங்கள் மற்றும் சகாக்கள் அவரது மரணத்திற்கு டுவிட்டர் மற்றும் முகநூலில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அவரது மகன் எஸ்.பி. சரண் ஊடகங்களிடம் வெளியிட்ட காணொலியில் “என் அப்பா மதியம் 1:04 மணிக்கு காலமானார். உங்கள் பிரார்த்தனைக்கு அனைவருக்கும் நன்றி. அவரது இரசிகர்கள் அவரை நினைவில் கொள்ளும் வரை எனது அப்பா நீண்ட காலம் வாழ்வார்” என்று கூறினார்.

கொவிட்19 தொற்றுக்கு ஆளாகி ஆகஸ்டு 5-ஆம் தேதி எஸ்.பி பாலசுப்ரமணியம் எம்ஜிஎம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆகஸ்ட் 13- ஆம் தேதி அவரது நிலைமை மோசமடைந்தது. அதன் பிறகு அவர் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார்.