Home One Line P2 டிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது

டிக்டாக்: அமெரிக்காவில் குழப்பம் இன்னும் நீடிக்கிறது

657
0
SHARE
Ad

வாஷிங்டன் : அமெரிக்காவின் டிக்டாக் குறுஞ்செயலியின் வணிகத்தை டிக்டாக் குளோபல் என்ற நிறுவனம் ஏற்றுக் கொள்ளும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. வால்மார்ட் நிறுவனம், ஒராக்கல் ஆகிய அமெரிக்க நிறுவனங்கள் கூட்டாகச் சேர்ந்து டிக்டாக்கின் பெரும்பான்மை பங்குகளை வாங்குவர் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், இந்த ஒப்பந்தம், டிக்டாக்கின் அமெரிக்க எதிர்காலம் குறித்த குழப்பம் இன்னும் நீடிக்கின்றன.

நேற்று வியாழக்கிழமை அமெரிக்க நீதிமன்றத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி டிக்டாக்கைத் தடைசெய்யும் உத்தரவை இடைக்காலத்திற்கு நிறுத்தி வைக்கும்படி டொனால்ட் டிரம்பின் அரசாங்கத்திற்குக் கட்டளையிட்டார்.

#TamilSchoolmychoice

இதற்கிடையில் சீன அரசாங்கத்தின் சில கட்டுப்பாடுகளும் டிக்டாக்கின் தொடர்ந்த செயல்பாடுகளுக்கு சட்டரீதியானப் பிரச்சனைகளை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிக்டாக் தொடர்புடைய பங்குதார நிறுவனங்கள் மாறி மாறி, முரண்பட்ட கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.

டிரம்ப் நிருவாகம் டிக்டாக்கைத் தடை செய்ய விதித்திருக்கும் காலக்கெடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை செப்டம்பர் 27-ஆம் தேதியோடு முடிவடைகிறது.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், டிரம்ப் நிருவாகம் இணைந்து ஓர் இணக்கமான முடிவைக் காண்பார்களா?

அல்லது இழுபறி தொடருமா? என்பது அடுத்த சில நாட்களில் தெரிய வரும்.