Home One Line P1 சபா தேர்தல்: வாக்களிப்பு தொடங்கியது! வரிசை வரிசையாக மக்கள்!

சபா தேர்தல்: வாக்களிப்பு தொடங்கியது! வரிசை வரிசையாக மக்கள்!

722
0
SHARE
Ad

கோத்தா கினபாலு : இன்று சனிக்கிழமை (செப்டம்பர் 26) காலை 7.30 மணிக்கு சபா சட்டமன்றத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு பரபரப்புடன் தொடங்கியது.

வாக்களிப்பு மையங்கள் திறக்கப்படுவதற்கு முன்னரே மக்கள் வரிசை, வரிசையாக வாக்களிக்கத் திரளத் தொடங்கியிருக்கின்றனர்.

வரலாற்றில் இல்லாத அளவுக்கு மிகப் பெரிய எண்ணிக்கையிலான வாக்காளர்கள் திரண்டு வந்து இன்று வாக்களிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த அளவுக்கு மிகப் பெரிய சர்ச்சையான அரசியல் விவகாரங்கள் இந்த முறை சபா தேர்தலில் எழுந்திருக்கின்றன.

#TamilSchoolmychoice

சபா தேர்தல் குறித்த முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:

  • 1 மில்லியனுக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்கத் தகுதி பெற்றிருக்கின்றனர்.
  • மொத்தமுள்ள 73 தொகுதிகளில் எல்லாத் தொகுதிகளிலும் போட்டிகள் நிலவுகின்றன. ஒரு தொகுதியில் 11 பேர்வரை வேட்பாளர்களாகப் போட்டியிடுகின்றனர். குறைந்த பட்சம் மும்முனைப் போட்டி என்பதில் தொடங்கி பல தொகுதிகளில் பல்முனைப் போட்டிகள் நிலவுகின்றன.
  • மொத்தம் 17 கட்சிகள் போட்டியிடுகின்றன.
  • இந்த 17 கட்சிகளில் இருந்தும் சுயேச்சை வேட்பாளர்களாகவும் 447 வேட்பாளர்கள் போட்டியில் குதித்திருக்கின்றனர்.
  • தீபகற்ப மலேசியாவிலிருந்து நிறைய சபா வாக்காளர்கள் கடந்த சில நாட்களாக சபாவுக்குத் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
  • திரும்பி சபாவுக்கு செல்ல முடியாத பல சபா வாக்காளர்களுக்கு பல அறநிறுவனங்களும் அரசு சார்பற்ற இயக்கங்களும் விமானப் பயணக் கட்டணத்துக்கான நிதி உதவிகளை வழங்கி வருகின்றன.
  • இன்று இரவுக்குள் அனைத்துத் தொகுதிகளுக்குமான முடிவுகளை தேர்தல் ஆணையம் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.